போலி முகப்புத்தகத்தால் 14 வயது சிறுவனுக்கு நடந்த அவலம்

TubeTamil News
0

 போலி முகப்புத்தக கணக்கில் பெண் போல் பேசி 14 வயது சிறுவனை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சிறுவன் கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் ருவன்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கம்பஹா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, சிறுவனிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபரினுடைய போலி முகப்புத்தக பக்கம் உள்ளிட்ட தகவல்கள் குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top