கூடவே இருந்து குழி பறித்து விட்டதாக ரஷ்ய ஜனாதிபதி புலம்பல்

TubeTamil News
0

 உக்ரைனின் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா பயன்படுத்திய வாக்னர் கூலிப்படை, தற்பொழுது ரஷ்ய அசாங்கத்திற்கு எதிராக திரும்பியுள்ளது.

வாக்னர் கூலிப்படையின் ஆயுதக் கிளர்ச்சி தேச துரோக நடவடிக்கை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இந்த தேச துரோக நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் மிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



வாக்னர் துணை கூலிப்படையின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வாக்னர் துணை இராணுவ குழுவின் ஆயுத கிளர்ச்சி தொடர்பில் ஜனாதிபதி புடின் உஸ்பெகிஸ்தான், கசகஸ்தான், பெலாரஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவில் சிவில் போரொன்று இடம்பெறுவதற்கு இடமளிக்க போவதில்லை என புடின் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாய் நாட்டுக்கு எதிராக தேச துரோக செயலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி புடின் சுமத்தி வரும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் துரோகச் செயலில் ஈடுபடவில்லை எனவும் வாக்னர் கூலிப்படையின் தலைவர் Yevgeny Prigozhin தெரிவித்துள்ளார்.

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்

தாய்நாட்டின் மீது நேசம் கொண்டவர்கள் எனவும் தமது படையைச் சேர்ந்த எவரும் வேறு பக்கம் தாவக்கூடியவர்கள் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்யா பலவீனமடைந்து உள்ளமை அம்பலமாகியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ரஷ்யா பாரிய அளவில் பலவீனமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா அரசாங்கம் துணை ராணுவ படையை அல்லது கூலிப்படையை உக்ரைனில் நிலை நிறுத்தி இருப்பது நீண்ட கால அடிப்படையில் ரஷ்யாவிற்கு பிரச்சினைகளை  உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்னர் படையின் நகர்வுகள் காரணமாக ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ரஷ்யாவில் உள்நாட்டில் இடம்பெற்று வரும் முரண்பாட்டு நிலைமைகள் குறித்து மிக உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக பல நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top