அரச உத்தியோகத்தர்கள் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை உரிய வகையில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் யாழ் அரச அதிபர் .

tubetamil
0

 யாழில் பணியாற்றுகின்ற சில சமுர்த்தி உத்தியோகத்தர் குறித்து தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யார்.மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 22-06-2023 திகதி அன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் கீழ் பணியாற்றும் சில சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட செயல்பாடுகள் தொடர்பில் எனக்கு நேரடியாக முறைப்பாடுகள் வருகிறது.

அரச உத்தியோகத்தர்கள் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை உரிய வகையில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

அதனை விடுத்து பணியாறும் பகுதிகளில் தமது அரச பணியை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் செயற்பாடுகளை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது.

ஆகவே இந்த விடயம் தொடர்பில் அரச சேவை ஒழுங்காற்று விதிகளுக்கு அமைய சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்கற்று நடவடிக்கை மேற்கொள்ள தயங்க மாட்டேன், தொப்பி அளவானவர்கள் மட்டும் போட்டு கொள்ளவும் என தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலதிக அரச அதிபர் முதலாளிதரன் ( காணி) பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top