200 வருட கால ஆயுட் தண்டனை வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

TubeTamil News
0

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொது மன்னிப்பில் தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.´கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு, 200 வருட ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த, சண்முகரத்தினம் சண்முகராஜன் மற்றும் செல்லையா நவரத்தினம் ஆகியோரே நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கடந்த மாதம் கனடாவில் இருந்து இலங்கைக்கு வருகைதந்திருந்த அரசியல் மற்றும் சமூகசேவை செயற்பாட்டாளர் ரோய் சமாதானம் மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவுக்கும் இடையில், அரசியல் கைதிகள் தொடர்பாக பேச்சுவார்தைகள் இடம்பெற்று இருந்தன.

 200 வருட கால ஆயுட் தண்டனை வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

சிறைச்சாலைக்கு சென்று அரசியல்கைதிகளுடனும் கலந்துரையாடியிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே நேற்றைய தினம் இரு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய அரசியல் கைதிகளையும் மிக விரைவில் விடுதலை செய்வதற்கான பேச்சுகள் தொடர்ந்துகொண்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் .


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top