சட்டத்திற்கான மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் மனித உரிமை தொடர்பான கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழஙகும் நிகழ்வு இன்று..!!

tubetamil
0




 சட்டத்திற்கான மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் மனித உரிமை தொடர்பான கற்கை நெறிகளைப் பூர்த்தி  செய்தவர்களுக்கான சான்றிதழ் வழஙகும் நிகழ்வு இன்று (13) காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் ஆரம்பமானது.


இந் நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக ஊர்காவற்துறை பிரதேச செயளாளர் மஞ்சுளாதேவி சதிசனும் ; சிறப்பு விருந்தினராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் ; கௌரவ விருந்தினர்களாக மனித உரிமை ஆலோசகர் ருக்கி பெர்ணாண்டோவும் கலந்து கொண்டனர்.


குறித்த நிகழ்வில் நூறு மணித்தியாலங்களை உள்ளடக்கிய 6 மாத கால சட்ட மற்றும் மனித உரிமை கற்கை நெறியைப் பூர்த்தி செய்த 22 மாணவர்களுக்கான சான்றிதழ்கமனித உரிமை மீறல் தொடர்பில் தீர்வுகளைப் பெறும் நோக்கில் நிர்வாகத் துறையை நாடுமிடத்து பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிடுவதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்துள்ளார்.


சட்டத்திற்கான மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் மனித உரிமை தொடர்பான கற்கை நெறிகளைப் பூர்த்தி  செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும்  நிகழ்வில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  


தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,


எமது நாட்டைப் போன்ற நாடுகளில் மனித உரிமை கோட்பாடுகளுக்கும் கள நிலமைகளுக்கும் வேறுபாடுகள் அதிகமுள்ளன.


அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை,  ஒரு பிரஜைக்கான உரிமையாகக் காணப்படினும் அவ்வாறு ஒன்று கூடும் போது சவால் நிலைமைகள் ஏற்படுவதைக் காணலாம்.


கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் அடிப்படை உரிமையாக  கருதப்படுமிடத்தும் சற்று எல்லை  மீறுமிடத்தில் கைது செய்யப்படும் நிலை ஏற்படும். அண்மையிலும்  சிலர் தெரிவித்த கருத்துக்களால் நீதிமன்றம் வரை சென்று பிணை வழங்கும்  நிலை கூட ஏற்பட்டது.


சட்டத்தின்பால் செயற்படும் நிறுவனங்கள் பல சவாலுக்கு முகம் கொடுப்பதுடன், மனித உரிமையும்  சவாலுக்குட்பட்டதாக காணப்படுகின்றது.


கீழைத் தேசங்களில் சர்வதேச சட்டத்திலே உள்ள உரிமைகளை ஏற்றிருந்தாலும் இங்கு சட்டமாக்கும் போது தமக்குச் சார்பான வகையிலே சட்டங்கள் இயற்றப்படும். சர்வதேச மட்டத்தில் உள்ள உரிமைகளை வழங்குவதை விட மறுப்பதற்கே அரசுகள் முன் நிற்கின்றன.


பொதுமக்களுக்கும்  மனித உரிமையால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கும் மனித உரிமை  தொடர்பான அறிவு குறைவானதாக உள்ளது. அதே போல் மனித உரிமை மீறல் தொடர்பில் தீர்வுகளைப் பெறும் நோக்கில் நிர்வாகத்துறையை நாடுமிடத்து பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிடுகின்றது.


அண்மையில் பெண்கள் தொடர்பில்  மிகவும் கீழ்த்தரமாக முகநூலில் காணொளி  பதிவேற்றம் செய்த நபரின் வீட்டினை மக்கள் சட்டத்தைக் கையிலெடுத்து தாக்கியதன்  காரணமாக ஆண்,  பெண் என இருபாலரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


இன்று  பல இடங்களில் மனித உரிமை என்ற பெயரில் ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் தற்போது அதிகாரங்களைத் துஸ்பிரயோகம் செய்கின்றனர் எனவும் தெரிவித்தார்.










ள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top