அத்திவார இடிபாடுகளில் இருந்த ஆயுதங்களும் தோட்டாக்களும் மீட்பு..!!

tubetamil
004.07.2023 இன்று12.00 மணி அளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவு உயரபுலம், அடைக்கலநாயகி வீதியை சேர்ந்த குகதாஸ் மோகனா என்பவர் தனது காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டு  குழி வெட்டிய போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் குழியில் தெரிந்ததை அடுத்து உடனடியாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார்.சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற

மானிப்பாய் பொலிஸ் அங்கு சோதனையிட்டதில் அத்திவார இடிபாடுகளில்   இருந்து ஒரு தொகை  ஆயுதங்கள் தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டு அந்த ஆயுதங்களையும் தோட்டாக்களையும் பொலிஸ்சார் கைப்பற்றியுள்ளனர். இதனை அடுத்து நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலீசார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top