தகாத உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

tubetamil
0

 தகாத உறவின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிடப் போவதாக கூறி தங்க ஆபரணங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்ற இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெண் ஒருவருடன் தகாத உறவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பெண்ணின் கணவருக்கு காண்பிப்பதாக குறித்த இளைஞன் அச்சுறுத்தியுள்ளான்.

இவ்வாறு பெண்ணை அச்சுறுத்தி 1,785,000 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை  பலவந்தமாக உடமையாக்கியமை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸாருக்கு நேற்று (19) காலை முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமஸ்வத்த பிரதேசத்தில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு, கோமஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது நீர்கொழும்பு நகரிலுள்ள கடையொன்றில் தங்க நகையை சந்தேகநபர் விற்பனை செய்திருந்தமை தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த தங்க நகை உருக்கப்பட்டுள்ள நிலையில், 4 கிராம் எடையுள்ள தங்க கட்டியாக மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (20) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top