நாட்டில் நிலவும் வறட்சியினால் ஒன்பது மாவட்டங்களில் சுமார் 100,000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பொது மக்கள் வறட்சியான காலநிலையால் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, இரத்தினபுரி, பதுளை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் 30,862 குடும்பங்களைச் சேர்ந்த 99,594 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வறட்சி
நிலவும் வறட்சியினால் சங்கானை பிரதேசம் ஜூன் மாதத்திற்கு பிறகு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் 69,000 இற்கும் மேற்பட்ட நபர்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இலங்கையில் போதிய மழையை பெறவில்லை எனவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதிய மழை பெய்யாது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
'எல் நினோ விளைவு' காரணமாக இவ்வாறு மழை பெய்யாமல் இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.