இலங்கையில் கனேடிய சிறுவர்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்! சுற்றுலா வழிகாட்டிக்கு பொலிஸார் வலைவீச்சு

tubetamil
0

 கனேடிய சிறுவர்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரைக் கண்டுபிடிக்க கொஸ்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கனடாவைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் சிறுவனும் தங்கள் தந்தையுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

சுற்றுலா வழிகாட்டி  தலைமறைவு








கொஸ்கொடவில் இருந்து காலி கோட்டைக்கு வான் ஒன்றில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது குறித்த சுற்றுலா வழிகாட்டி, சிறுவர்களை வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த கொஸ்கொட சம்பத் என்ற சுற்றுலா வழிகாட்டி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top