இலங்கையில் வட்டி வீதங்களை குறைப்பா..? வங்கிகளின் நிலைப்பாடு தொடர்பில் வெளியான தகவல்..

keerthi
0


மத்திய வங்கியின் உத்தரவிற்கு அமைய எந்தவொரு வணிக வங்கியும் வட்டி வீதத்தை குறைக்கவில்லை என கூறப்படுகின்றது.

குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துனர்கள் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்தோடு வட்டி விகிதங்களைக் குறைப்பது தொடர்பான சுற்றறிக்கைகள் சில வர்த்தக வங்கிகளுக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கான பொறுப்பை மத்திய வங்கி ஆளுநரே ஏற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் செயலாளர் அசங்க ருவன் பொத்துப்பிட்டிய கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top