ஹொரணையில் திருமண நிகழ்வொன்றில் நடனமாடிக் கொண்டிருந்த 25 வயதுடைய திருமணமாகாத யுவதியொருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
25 வயதுடைய மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
“என் மகளால் பருப்பு, கொண்டைக்கடலை சாப்பிட முடியாது. அவற்றை சாப்பிடும் போது ஒவ்வாமை ஏற்படுகிறது. அவற்றை சாப்பிட்டால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அதனால்தான் என் மகள் அந்த உணவை எடுத்துக் கொள்ள முடியாது” என மஞ்சரியின் மரணம் தொடர்பான விசாரணையில் சாட்சியமளித்த அவரின் தாயார் தெரிவித்தார்.

உயிரிழந்த பெண் ஹொரணையில் உள்ள கோணபொல நிகழ்வு மண்டபத்தில் தான் பணிபுரியும் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரின் திருமண வைபவம் ஒன்றிற்கு வேறு நபர்களுடன் சென்றுள்ளதுடன், அங்கிருந்த குழுவினருடன் உல்லாசமாக நடனமாடியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் மேலும் இரு யுவதியுடன் நடனமாடிவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹொரணையில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.