பொலிஸ் என்று இன்ஸ்டாவில் காதல்! நிர்வாண வீடியோ எடுத்து கல்லூரி மாணவியை மிரட்டல்

tubetamil
0

 இந்திய மாநிலம் கர்நாடகாவில் கல்லூரி மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இன்ஸ்டாவில் காதல்

கர்நாடகா மாநிலம், மங்களூரில் 19 வயது மாணவி ஒருவர் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இவருக்கு, இன்ஸ்டா மூலம் பொலிஸ் உடையில் உள்ள ஒரு புகைப்படத்துடன் இருந்த யமனூரா (22) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளனர். அப்போது அந்த இளைஞர் தான் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.


பின்பு, இருவரும் தங்களுடைய செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, தன்னை அதிக முறை சப் இன்ஸ்பெக்டர் என்று கூறிக் கொண்டே இருந்ததால் மாணவிக்கு அந்த இளைஞர் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

போட்டோ வைத்து மிரட்டல்

பின்னர், இருவரும் மங்களூருவில் உள்ள கத்ரி கோவில் தன்னி பாவி கடற்கரைக்கு அடிக்கடி சென்றுள்ளனர். அங்கு, புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படங்களை வைத்து அந்த இளைஞர், கல்லூரி மாணவியை மிரட்ட தொடங்கியுள்ளார். தொடர்ந்து இளைஞர், என்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

இதனால், பயந்த மாணவி அந்த இளைஞருடன் செல்ல தொடங்கினார். அப்போது, அந்த இளைஞர் பெங்களூர் அருகில் உள்ள லாட்ஜிக்கு மாணவியை அழைத்துச் சென்று பலாத்காரம் . இதே போல், மங்களூர் அருகிலுள்ள ஒரு லாட்ஜிக்கும் அழைத்துச் சென்றும பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பொலிசில் புகார்

மேலும், அந்த இளைஞர் மாணவியை நிர்வாண வீடியோ எடுத்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் ரூ.1.50 லட்சம் தரவில்லையென்றால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் எனக் கூறி யமனூரா மிரட்டியுள்ளார்.

பின்னர், மாணவி பணம் தர மறுத்ததால் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி அங்குள்ள மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையின் போது, மாணவியை மிரட்டிய இளைஞர் உண்மையான பொலிஸ் இல்லை, நாடகத்தில் வேடமணிந்து நடிப்பவர் என்ற அதிர்ச்சி செய்தி தெரியவந்தது.

இதனையடுத்து, பொலிசார் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top