முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு...

tubetamil
0

 நாட்டில் முட்டை விலை குறைக்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதித்தால், டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையை 35 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளது.

விற்பனை செய்ய நடவடிக்கை 





மேலும், கட்டுப்பாட்டு விலையை நீக்கும் நடவடிக்கையின் காரணமாக தற்போது முட்டை விற்பனை வலையமைப்பு வலுவடைந்து வருவதாக அதன் தலைவர் அஜித் குணசேகர கூறியுள்ளார்.

உறைந்த கோழி இறைச்சி ஒரு கிலோ 1,250 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஜித் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top