அதிகளவான மருந்துப் பாவனையால் இரத்த வாந்தி எடுத்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்.வடமராட்சி, இமையான் பகுதியைச் சேர்ந்த இராசா சிவபாதம் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வீட்டில் இரத்த வாந்தி எடுத்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று (10.08.2023) உயிரிழந்துள்ளார்.
அதிகளவான மருந்துப் பாவனையால் உயிரிழப்பு ஏற்பட்டது என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர், கடந்த 8 மாத காலமாக உளநோய்க்கு உள்ளான நிலையில் அதற்குச் சிகிச்சை பெற்று அதற்கான மருந்துகளை பாவித்து வந்தவர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.