பேருந்து விபத்து- 21 மாணவர்கள் வைத்தியசாலையில்...!

keerthi
0

 


பாதுக்க - துன்னான பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. 

 நாராம்மல பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் ஹோமாகம நோக்கி பயணித்த பேருந்து ஒன்றுடன் பின்னால் வருகை தந்த பேருந்து மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. 

 அத்தோடு இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 21 பேரும் ஆசிரியை ஒருவரும் காயமடைந்த நிலையில் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 இச் சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top