அமெரிக்காவின் - அரிசோனா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளனர்.
எனினும் குறித்த முறைப்பாட்டின்படி, காவல்துறையினர் அந்த வீட்டில், சோதனை நடத்தியுள்ளனர்.
அப்பொழுது, அந்த வீட்டின் குளிர்சாதன பெட்டியில், உயிரிழந்த நாய்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த வீட்டில் 55 நாய்கள் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து, குறித்த வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
