கம்பனிகாரர்களை கட்டுக்குள் கொண்டு வாருங்கள்: மனோ எம்.பி

keerthi
0




 "பொலிஸ்காரர்களை போலவும், நீதிமன்ற கட்டளை இருப்பதாகவும் நடித்து அப்பாவிகளின் வீட்டை உடைக்கும் முறைக்கேடானவர்கள் இவர்கள் என சற்றுமுன் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் கூறினேன். கம்பனிகாரர்களை கட்டுக்குள் கொண்டு வாருங்கள்" என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இரத்தினபுரி காவத்தை பிளான்டேசன் வெள்ளந்துரை தோட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின்போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கூறியதாவது....

‘‘ஒவ்வொருமுறையும் இவ்வாறான சம்பவம் நடக்கிறது. நாம் கேள்வி எழுப்புகிறோம். நீங்கள் பதில் கூறுகிறீர்கள். அல்லது ஒரு அரசாங்க அரசியல்வாதியை அங்கே அனுப்பி அதன் பின் ஒளிந்து கொள்கிறீர்கள்.

எனினும் இதற்கு தீர்வுதான் என்ன? என்று மேலும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணரிடம் கேட்டேன்.

மேலும் இந்த கம்பனிகாரர்களுடன் பணியாற்ற முடியவில்லை. ஜனாதிபதியிடம் பேசி முழுமையான தீர்வை தேடுவோம் என ரமேஷ் பத்திரண பதிலளித்தார்'' என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top