அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

keerthi
0

 




கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் திங்கட்கிழமை  சற்று அதிகரித்துள்ளது.

இவ்வாறுஇருக்கையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (11.09.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 327.60 ரூபாவாகவும், கொள்வனவு விலை 316.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு , கனேடிய டொலரின் விற்பனை விலை 242.22 ரூபாவாகவும், கொள்வனவு விலை 230.71 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 353.41 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 337.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 411.21 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 393.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.    


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top