இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக விடுதலை!

keerthi
0




இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது என தற்போது தகவல் வெளியாகி  உள்ளது.


சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தார். 


தனுஷ்க குணதிலக, டிண்டர் என்ற சமூக ஊடக செயலி மூலம் தான் சந்தித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


அதாவது கடந்த 21ஆம் திகதி சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தனுஷ்கவின் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (28) அதன்  தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top