புறக்கணிக்கப்பட்டார் மகிந்த: மொட்டு கட்சி தொடர்பில் மைத்திரி வெளியிட்ட தகவல்..!

keerthi
0

 



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன  கூறியுள்ளார்.

கொழும்பில் நாளை நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72வது ஆண்டு நிறைவு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்....

''கட்சியின் ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சுவரொட்டியை மறைத்து வேறொரு தரப்பினர் சுவரொட்டியை காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

எங்கள் கட்சியை பிளவுபடுத்தும் செயற்பாடு வெளிதரப்பினரால் மேற்கொள்ளப்படுகிறது.

எனினும் குறிப்பாக மொட்டு கட்சி தற்போது பத்து கட்சிகளாக பிளவுபட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் அவர்களின் பிளவு நிலையை காணமுடிகிறது.

தற்போது ஆளும் தரப்பில் சுகாதாரத்துறை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு அமைச்சர் ஒருவர் மாற்றப்படுவதால் மட்டும் தீர்வு கிடைக்காது." என கூறியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top