யாழில் இரு பெண்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

keerthi
0

 



யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் இரு பெண்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

வீடு ஒன்றிற்கு சென்ற இனந்தெரியாத சிலர் அங்கிருந்த 24 வயதுடைய யுவதி மற்றும் 65 வயதுடைய அவரது தாயார் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மேலும் இத் தாக்குதலுக்கு இலக்கான இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 தனிப்பட்ட பகையே வாள்வெட்டு சம்பவத்திற்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top