பட்டதாரி யுவதியை அழைத்துச் செல்ல முயற்சித்த முன்னாள் காதலன் அடித்து கொலை!

keerthi
0



பட்டதாரி யுவதி ஒருவரை வலுக்கட்டாயமாக அழைத்து செல்ல முயன்ற முன்னாள் காதலன் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக ரொட்டம்ப பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி, கஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய அந்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை  என கூறப்படுகின்றது.

உயிரிழந்த நபர் குறித்த யுவதியுடன் சிறிது காலமாக காதல் உறவில் இருந்துள்ளார். 

இந்நிலையில், அந்த யுவதி அவருடனான உறவை நிறுத்தியதால், காதலன் தொலைபேசியில் திட்டி மிரட்டியுள்ளார். இச்சம்பவத்துக்கு முன்னைய நாளும் (3) யுவதியை மிரட்டியதால் அவரின் பெற்றோரும் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (4) அந்த யுவதியின் வீட்டுக்கு வந்த நபர், குறித்த யுவதியை பலாத்காரமாக அழைத்துச் செல்ல முயற்பட்டபோதே அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top