போரை உக்கிரப்படுத்தும் இஸ்ரேல்- 1,000-க்கும் மேற்பட்டோர் பலி..!

keerthi
0


 ஹமாஸ் பயங்ரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. அதாவது காசா நகரில் இஸ்ரேல் படைகள் குண்டு மழை பொழிந்ததில் பல கட்டிடங்கள் தரை மட்டம் ஆகியுள்ளன. இந்த சண்டையில் இரு தரப்பிலும் சேர்த்து பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.


இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த 7ம் தேதி, காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதலை தொடங்கினர்.


ஆபரேஷன் அல் அக்‌ஷா புயல் என்ற பெயரில் தாக்குதலை ஹமாஸ் பயங்கரவாதிகள் தொடங்கினர். இந்த தாக்குதலில் இஸ்ரேல் திக்கு முக்காடிப்போனது. ராக்கெட் மழை பொழிந்து ஒருபக்கம் தாக்குதல் என்றால் மற்றொரு பக்கம் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி சரமாரி தாக்குதலை தொடுத்தனர். இதையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரை அறிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகூ தாக்குதலை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.


எனினும் இதையடுத்து, இஸ்ரேலின் போர் விமானங்கள் காசா நகரம் மீது குண்டு மழை பொழிந்தது. இதனால் ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான சண்டை உக்கிரம் அடைந்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசா நகரில் பொழிந்த குண்டு மழைகளால் காசாவில் உள்ள பல கட்டிடங்கள் தரை மட்டமாகின. இதனிடையே, ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலில் தங்கள் கட்டுப்பாடுகளில் இருக்கும் பகுதிகளில் உள்ள ஏராளமானோரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.


 இது தொடர்பாக துருக்கி உதவியை இஸ்ரேல் நாடியிருப்பதாகவும் துருக்கியும் பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 600 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் படைகள் நடத்திய பதில் தக்குதலில் பயங்கரவாதிகள் 400 பேர், பொதுமக்கள் 300 பேருக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.


அத்தோடு ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரால் இரு தரப்பிலும் சேர்த்து பலி எண்ணிக்கை 1,300 ஐ கடந்துள்ளது. தாக்குதல்கள் தீவிரம் அடைந்து இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.. இதற்கிடையே, காசா முனையில் மின் விநியோகத்தை இஸ்ரேல் அரசு நிறுத்தியுள்ளது.


இதனால், அப்பகுதி இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகூ ஞாயிற்றுக்கிழமை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "நாடு நீண்ட கால மற்றும் கடினமான போரை தொடங்கியிருப்பதாகவும் இலக்கை எட்டும் வரை இது நீடிக்கும்" என்று பதிவிட்டு இருந்தார்.


இஸ்ரேலுக்கு அவசர ராணுவ உதவி தொகுப்பு வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். எனினும் இதன்படி, இஸ்ரேலுக்கு 8 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவி அளிக்கப்பட உள்ளது. இஸ்ரேல் பிரதமருடன் பேசியிருந்த ஜோ பைடன் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து இருந்தார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top