2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவிருந்த 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு பிற்போடப்பட்டது.
எனினும் , குறித்த பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறுஇருக்கையில், 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.