மின் கட்டண உயர்வைக் கண்டித்து வவுனியாவில் தீப் பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுனியா, இலுப்பையடி முன்பாக குறித்த போராட்டம் நேற்று (26) மாலை முன்னெடுக்கப்பட்டது.
அத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் '' ரணில் - ராஜபக்ஸ அரசே மின்கட்டணத்தை குறை, மின் கட்டணத்தை கூட்டி வறிய மக்களை கொல்லாதே, மின் கண்டண உயர்வால் தற்கொலையை தூண்டாதே, ஜனாதிபதி ரணிலே வீட்டுக்கு போ'' என கோசங்களை எழுப்பியதுடன், தீப் பந்தங்களையும் ஏந்தியிருந்தனர்.
எனினும் குறித்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவாட்ட அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவரின் பிரதான ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரசிக்கா பிரியதர்சினி மற்றும் கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.