மேலதிக வகுப்புக்கு அனுப்பும் பெற்றோருக்கு எச்சரிக்கை..!

keerthi
0

 



மொனராகலையில் மேலதிக வகுப்புக்கு சென்று மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தொம்பகஹவெல, லியங்கொல்ல பிரதேசத்தில் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறான துர்நடத்தையில் ஈடுபட்டுள்ளார்.


அத்தோடு கடந்த எட்டாம் திகதி கணித பாடத்திற்கு இரண்டு வினாத்தாள்கள் வழங்க வேண்டியுள்ளதால், மாணவியை மேலதிக வகுப்புக்காக தனது வீட்டு வகுப்புக்கு அனுப்புமாறு மாணவியின் தாயிடம் தெரிவித்துள்ளார்.


எனினும் தற்போது யாரும் வசிக்காத தனது சகோதரியின் வீட்டிற்கு மாணவியை அழைத்து சென்றுள்ளார்.


அங்கு மாணவிக்கு சாப்பிடுவதற்கு உணவுகளை கொடுத்துள்ள நிலையில் மாணவி மயக்கமடைந்ததை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


அத்தோடு சமகாலத்தில் மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இது குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top