தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு 20 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
பொது நிறுவனங்களுக்கான குழுவான கோப் இதனை வெளிப்படுத்தியுள்ளது.
அத்தோடு இதில் 2011 இல் எந்த பிணையமும் இல்லாமல் வழங்கப்பட்ட 19 பில்லியன் ரூபாய்களும் அடங்குகின்றன.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் பல்வேறு அமைச்சர்களின் ஆட்சிக் காலங்களிலும் இந்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுமார் 5,296 பேர் இந்த நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். அத்தோடு இதில், 2,148 பேர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.