கொழும்பில் ஆபத்தான நிலையில் பல கடைகள் : உயிரிழக்கும் நிலையில் ஊழியர்கள்

keerthi
0

 



கொழும்பு புறக்கோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பல கட்டடங்களில் தீ பாதுகாப்புக்கான முறையான அமைப்பு இல்லை என கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.


திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அந்தக் கட்டடங்களில் பணியாற்றுவோரின் நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு கடந்த 27ஆம் திகதி, புறக்கோட்டை 2வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 22 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.


தீ பரவல் காரணமாக 4வது மாடியில் இருந்த குழுவினர் வெளியே வருவதற்கான கதவை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


நெருப்பினால் ஏற்படும் வெப்பம் மற்றும் புகை உள்ளிழுத்தலால் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததாகவும் குழுவினரை மீட்க வந்த கொழும்பு தீயணைப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


“நான் கட்டிடத்திற்கு வெளியே சென்று கதவு பூட்டை உடைத்துக்கொண்டு நான்காவது மாடிக்குள் நுழைந்தேன். நான்காவது மாடிக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே ஒரு கதவுதான் இருந்தது.


மேலும் அவசர காலங்களில் பாதுகாப்பான வெளியேறும் அமைப்பு இல்லை. சில நிமிடங்கள் கடந்திருந்தால், அனைவரும் இறந்திருப்பார்கள்” என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top