‛இஸ்ரேலை சும்மா விடக்கூடாது’.. ஹமாசுக்காக போரிட தயாரான ஹிஸ்புல்லா!

keerthi
0
 இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் ஈரான் ஆதரவு பெற்ற லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு போரிட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பு யார்? இவர்கள் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலுக்கு ஏற்படும் சிக்கல் குறித்த ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.


இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த காசா பகுதியை பிடிக்க இஸ்ரேல் முயற்சிக்கிறது. இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது.


அத்தோடு கடந்த 7 ம் தேதி ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் மீது 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.  எல்லைகளை தாண்டி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து மக்களை கொன்றனர். அதோடு ஏராளமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.


எனினும் இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கி உள்ளதாக அறிவித்த இஸ்ரேல் காசா நகரில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. அத்தோடு இருதரப்புக்கும் இடையேயான இந்த யுத்தம் இன்று 8 வது நாளை தொட்டுள்ளது. தற்போது வரை இருதரப்பையும் சேர்த்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளதோடு, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


இதற்கிடையே தான் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஹமாஸ் அமைப்புக்கு இஸ்லாமியர் அமைப்பு ஆதரவாக உள்ள நிலையில் இஸ்ரேலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகள் பக்கப்பலமாக உள்ளன. மேலும் இப்படி ஆதரவு கொடுக்கும் அனைத்து நாடுகளும் போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதையே கூறி வருகின்றன.


மேலும் அந்த வகையில் ஹமாசுக்கு ஆதரவாக உள்ள ஒரு நாடு தான் லெபனான். இந்த நாடும், இஸ்ரேலும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. இரண்டும் அண்டை நாடுகளாக உள்ளன. லெபனானில் ஹிஸ்புல்லா எனும் போரளிக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழு ராக்கெட் ஏவுகணையை இஸ்ரேல் மீது சில நாட்களுக்கு முன்பு ஏவி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து லெபனானுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தொடங்கியது.


‛இடிக்குதே' சரத்பவார் கூறிய அந்த வார்த்தை! இஸ்ரேல் போரில் வெளியுறவு துறையிடம் இருந்து விலகிய மோடி?‛இடிக்குதே' சரத்பவார் கூறிய அந்த வார்த்தை! இஸ்ரேல் போரில் வெளியுறவு துறையிடம் இருந்து விலகிய மோடி?


லெபனான் எல்லையோர கிராமமான தைராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் தெற்கு லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் 3 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இதுமட்டுமின்றி ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் ஒருவரும் பலியாகி உள்ளார். மேலும் 6 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


இவ்வாறுஇருக்கையில் தான் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க ஹமாஸ் தீவிரவாதிகளுடன் சேர்ந்து செயல்பட உள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற இந்த அமைப்பானது லெபனானில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பல முறை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்நிலையில் தான் தற்போதைய போருக்கு நடுவே ஹிஸ்புல்லா அமைப்பின் துணை தலைவர் நைம் காசிம் கூறியதாவது:


இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க நாங்கள் ஹமாஸ் அமைப்புடன் சேர்ந்து செயல்பட தயாராக இருக்கிறோம். ஹமாஸ் அமைப்புக்கு தேவையான உதவியை செய்ய முழுமையாக ரெடியாகி இருக்கிறோம். இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வரும்போது நாங்கள் எங்கள் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.


அரபு நாடுகள், ஐக்கிய நாடுகள் சார்பில் நேரடியாகவும், மறைமுகமாகவும் போரில் தலையிட வேண்டாம் என கூறினார்கள். ஆனால் அவர்களின் கட்டளை எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. ஏனென்றால் ஹிஸ்புல்லாவுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றி நன்கு தெரியும்'' என தெரிவித்துள்ளார்.


செம துணிச்சல்.. 60 ஹமாஸ் தீவிரவாதிகளை கொன்று 250 பிணைகைதிகளை மீட்ட இஸ்ரேல் ராணுவம்! த்ரில் வீடியோசெம துணிச்சல்.. 60 ஹமாஸ் தீவிரவாதிகளை கொன்று 250 பிணைகைதிகளை மீட்ட இஸ்ரேல் ராணுவம்! த்ரில் வீடியோ


தற்போதைய சூழலில் இஸ்ரேலின் ஒருபுறத்தில் காசா இருக்கும் நிலையில் மற்றொரு பக்கத்தில் லெபனான் உள்ளது. இதனால் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் இருமுனை தாக்குதலை சமாளிக்க வேண்டி இருக்கும். இது போரின் தன்மையை இன்னும் தீவிரப்படுத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.


எனினும் இதற்கிடையே தான் நேற்று லெபனானில் இருந்து தெற்கு புறநகர் பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள் பாலஸ்தீன கொடிகள், பதாகைகளுடன் போராட்டங்களை நடத்தினர். கடவுள் காசாவை பாதுகாக்கட்டும். டெல் அவிவ் மீது தாக்குதல் நடத்துங்கள் என கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top