காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய மற்றுமொரு தந்தை மரணம்!

keerthi
0

 வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.


அத்தோடு வவுனியா மகாறம்பைக்குளம் சிறீராமபுரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா ஆறுமுகம் (வயது - 65)என்ற தந்தையே மரணமடைந்துள்ளார்.


இவரது மகனான ஆறுமுகம் சிவகுமார் கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.


மேலும் அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.


இவ்வாறுஇருக்கையில்  மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top