இலங்கை கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு கடிதம்

keerthi
0



இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு புதிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.


அதாவது ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான முன்னைய விசாரணைகளில் காணக்கூடிய சில குறைபாடுகளை களைவதற்காக உள்ளுர் விசாரணைக்கு அந்த கடிதத்தின் ஊடாகஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அத்தோடு கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான, நீதிக்கான தேசிய கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர்களான கர்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட பல ஆயர்கள் கையெழுத்திட்ட இந்த கடிதத்தில், முந்தைய விசாரணைகளில் முக்கியமான பிரச்சினைகளை புறக்கணித்ததாகக் கூறப்பட்டுள்ளது.


இராணுவப் புலனாய்வு இயக்குநரகம் மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகியவை சஹ்ரானுடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருந்தன என்பது தெளிவாகிறது.


இந்த விசாரணைகளைத் தடுக்கவும் சூழ்ச்சிகரமான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


இதேவேளை செனல் 4 காணொளியில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் இலங்கை கத்தோலிக்க திருச்சபை குழு கோரியுள்ளது.


மேலும் இந்த விசாரணையை வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அந்த குழு வலியுறுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top