சுவிட்சர்லாந்தில் 34 வயதுடைய இலங்கையரின் சடலம் மீட்பு

keerthi
0

 







சுவிட்சர்லாந்தின் துர்காவ் மாநிலத்தில் 34 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடைய சடலம் திங்கட்கிழமை நள்ளிரவு மீட்கப்பட்டுள்ளதாக மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர்.


திங்கள்கிழமை நள்ளிரவு வீன்ஃபெல்டனில் (Weinfelden) பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் தொடர்பாகவும் , மரணத்திற்கான காரணம் தொடர்பாகவும் பொலிசார் இதுவரை எவ்விதமான தகவல்களையும் கூறவில்லை.


அத்தோடு நள்ளிரவு 1 மணியளவில், பிராந்திய பொலிஸ் ரோந்துப் பிரிவினரே பயிர்செய்கை நிலப்பரப்பிற்கு அருகாமையில் சடலத்தை மீட்டுள்ளதாகவும் , உயிரிழந்தவர் இலங்கையைச் சேர்ந்த 34 வயதுடையவர் என மட்டும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளார் என, பொலிஸ் இணையத்தள செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் தடயவியல் பிரிவினர் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். தடயவியல் மருத்துவ பிரிவிற்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் . அரசு வழக்கறிஞர் அலுவலகம் குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top