57 முறை காதலியை குத்தி கொன்ற இளைஞரை வினோத காரணம் சொல்லி விடுவித்த நீதிமன்றம்

keerthi
0



 காதலியைக் கொடூரமாகக் கொன்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் குண்டாக இருப்பதாக வினோத காரணம் சொல்லி நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.


சிறு சண்டையால் ஏற்பட்ட தகராற்றில் 35 வயதான இளைஞர் ஒருவர், தனது காதலியை 57 முறை கத்தியால் குத்திய படுகொலை செய்துள்ளார். அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.


இதற்கிடையே சிறையில் தனக்கு வழங்கப்படும் உணவு குறித்து அந்த இளைஞர் மேல்முறையீடு செய்திருந்தார். சிறையில் வழங்கப்படும் அதிக கலோரி உணவு அவரை கொல்லக்கூடும் என்று குறிப்பிட்ட அந்த நீதிபதி, சிறையில் இருந்த அந்த கொடூர குற்றவாளியை ரிலீஸ் செய்தார்.


 டிமிட்ரி ஃப்ரிகானோ என்ற அந்த நபர் தான் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அத்தோடு கடந்த 2017ஆம் ஆண்டில் அந்த நபர் தனது 25 வயது காதலி எரிகா ப்ரீட்டி என்பவருடன் விடுமுறைக்குச் சென்றிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே பிரட்தூகள் குறித்து சண்டை ஏற்பட்டது. அப்போது இருவரும் மாறி மாறி திட்டச் சிறு சண்டை கையை மீறிச் சென்றது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது காதலி எரிகாவை கொடூரமாகக் கொலை செய்தார். மொத்தம் 57 முறை தனது காதலியைக் குத்தி அவர் கொடூரமாகக் கொன்றுள்ளார்.


இது குறித்த விசாரணை நடைபெற்ற நிலையில், 2019இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. டிமிட்ரி தனது காதலியைக் கொலை செய்தது உறுதியான நிலையில், அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், மேல்முறையீடு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அவர் 2022 வரை சிறைக்குச் செல்லவே இல்லை.


சிறைக்குச் செல்லும் போது டிமிட்ரி உடல் எடை 120 கிலோவாக இருந்தது. எனினும் இதற்கிடையே வெறும் ஒரே ஆண்டில் டிமிட்ரியை மருத்துவ காரணங்களுக்காக இத்தாலி நீதிமன்றம் விடுவித்துள்ளது. அதாவது அதிக எடையால் அவதிப்பட்டு வரும் டிமிட்ரி இப்போது உடல் எடையைக் குறைக்க வேண்டும். இதற்கு அவர் குறைந்த கலோரி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், சிறையில் குறைந்த கலோரி உணவிற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.


இதனால் அவருக்கு வழக்கமான உணவே தரப்பட்டுள்ளது. இதனால் சிறைக்குச் சென்ற பிறகு அவரது உடல் எடை 200 கிலோ வரை அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக அவரால் நடக்கவே முடியவில்லையாம். சக்கர நாற்காலி அல்லது ஊன்றுகோல் உதவியுடன் நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஓவர் எடை டிமிட்ரியை சிறைக்குப் பொருந்தாதவராக மாற்றுவதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.


சிறையில் அவருக்கென தனியாகக் குறைந்த கலோரி உணவுகளைக் கொடுக்க முடியாது என்று சிறை அதிகாரிகள் கூறியனர். அத்தோடு அவர் சிறையில் தொடர்ந்து இருந்தால் அது அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. அதாவது அடுத்த 30 ஆண்டுகள் அவர் சிறையில் இருக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக அவர் வீட்டுச் சிறையில் இருக்கலாம். உடல் எடையைக் குறைக்க அவருக்குக் குறைந்த கலோரி உணவு கிடைக்கும் என்பதால் வீட்டுச் சிறையில் அவரை வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


அத்தோடு டிமிட்ரி ப்ரிகானோ தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் அதை மறைக்க எந்தவொரு பொய்யையும் நீதிமன்றத்தில் கூறவில்லை. சாப்பிடும் போது டெபிளில் பிரட் துகள்களை விடுவது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இந்த கொடூர கொலை அரங்கேறியுள்ளது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த பேப்பர் வெயிட்டை தூக்கி டிமிட்ரி மீது வீசியுள்ளார் எரிகா.. இதனால் ஆத்திரமடைந்த அவர், அருகில் இருந்த கத்தியை எடுத்து எரிகாவை சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளார்.


 "அவள் ரொட்டிக்காக என்னை அவமானப்படுத்தினார்.. மேலும், தலையில் என்ன அடித்தார். இதன் காரணமாகவே நான் அவரை கொன்றேன்" என்று வாக்குமூலமும் அளித்திருந்தார். இந்தச் சூழலில் தான் உடல் பருமனைக் காரணம் காட்டி அவரை இத்தாலி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இருப்பினும், இதற்கு அங்கே பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top