நாடளாவிய ரீதியில் மூடப்பட்டுள்ள வைத்தியசாலைகள்: சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

keerthi
0


நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், பல்வேறு காரணங்களால் மேலும் 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிய வருகையில், இந்த வருடத்தின் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர்.

இதனால் நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த வைத்தியசாலைகளுக்கு அவசியமான வைத்திய உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்து, சிகிச்சை செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

 அத்தோடு இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top