நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு .. எவ்வளவு தெரியுமா?

keerthi
0





தென்னிந்திய திரையுலகில்,90 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரோஜா. செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்சின் மனதில் பக்காவாக இடம் பிடித்தார்.


இதையடுத்து, ரஜினி, சத்யராஜ், பிரபு, பிரபுதேவா, சிரஞ்சீவி உள்பட தென்னிந்திய ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.


இன்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பை தெரிந்து கொள்ளலாமா.


 நடிகை ரோஜா 1972 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி ஆந்திரா மாநிலம், திருப்பதியில் நாகராஜ ரெட்டி மற்றும் லலிதா தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். பொலிட்டிக்கல் சயின்ஸ் முடித்த நடிகை ரோஜா சினிமாவில் வருவதற்கு முன் குச்சுப்புடி நடனக்கலைஞராக இருந்தார்.


எனினும் இதையடுத்து,1991ம் ஆண்டு 'பிரேம தப்பாஸு' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நடிகையாக மாறினார். அதன் பின் செம்பருத்தி படத்தில் நடித்த ரோஜா இயக்குநர் செல்வமணி காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். ரோஜாவை வைத்து ஒரு சில படங்களை ஆர்கே செல்வமணி இயக்கிய நிலையில், இருவரும் காதல் மலர்ந்ததை அடுத்து, இருவரும் திருமணமும் செய்துக் கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.அத்தோடு  மகள் அன்ஷூகா மாலிகா சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் பரவியது. ஆனால், அதை ஆர்கே செல்வமணி மறுத்தார்.


 ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோஜா, 1999ம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். எனினும் அதன் பின்னர் 2009ம் ஆண்டு அக்கட்சியை விட்டு விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ரோஜா பின்னாளில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.


 இன்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகை ரோஜாவிற்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், அவரின் மொத்த சொத்து மதிப்பு, ரூ 70 கோடி என்றும், ஹைதராபாத் மற்றும் சென்னையில் அவருக்கு சொத்தமாக பல வீடுகள் உள்ளன. அவற்றின் மதிப்பு பல கோடி இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top