காசா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்! வாய் திறக்க மறுக்கும் அமெரிக்கா!

keerthi
0




 காசா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்கா கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.


மேலும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் இந்த மோதலை ஆரம்பித்திருந்தாலும் கூட இப்போது இஸ்ரேல் தான் முழு வீச்சில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.


இதனால் அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.அத்தோடு  காசா மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல், இப்போது தரைவழித் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாக மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.


 இதற்கிடையே இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஹமாஸ் சுரங்கப் பாதைகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறியுள்ளது. அதாவது வெளியே அவை மருத்துவமனைகள் போல இருந்தாலும் கீழ் சுரங்கப் பாதைகளை அமைத்து அதை ஒரு கட்டுப்பாட்டு மையம் போல ஹமாஸ் நடத்தி வந்துள்ளது. அந்த மருத்துவமனைகள் கீழ் அதிநவீன ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடி மருந்துகளை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது.


காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது மிக பெரிய சர்ச்சையானது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை வெளிப்படையாகக் கண்டித்தனர். அத்தோடு மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது பாவம் என்றும் இதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்தனர். இந்தச் சூழலில் தான் எதற்காக மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்பதை விளக்கும் வகையில் இஸ்ரேல் வீடியோக்களை வெளியிட்டுள்ளது.


அதில் மருத்துவமனைக்கு முன்பு நின்றபடி முதலில் சில நிமிடங்கள் இஸ்ரேல் வீரர் பேசுகிறார். அங்கிருந்து அவர் மருத்துவமனைக்குள் செல்ல.. கேமராவும் கட் ஆகாமல் செல்கிறது. அங்கே உள்ளே குவியல் குவியலாக ஆயுதங்கள், துப்பாக்கிகள் வெடிமருந்துகள் இருப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை ஹமாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.


இஸ்ரேலுக்கு இந்தப் போரில் அமெரிக்கா முழுமையாக ஆதரவு அளித்து வரும் நிலையில், மருத்துவமனை மீதான இந்தத் தாக்குதல்கள் அமெரிக்காவுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே காசா மருத்துவமனையில் ஹமாஸ் நடவடிக்கை மூலம் பெறப்பட்ட உளவுத் துறை தகவல்கள் குறித்து பொது வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.


 இது தொடர்பாக அமெரிக்கா மேலும் கூறுகையில், "இரு நாடுகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளும் குறிப்பிட்ட உளவுத் தகவல்கள் குறித்து என்னால் எந்தவொரு தகவலையும் பகிர முடியாது. அது குறித்து விளக்கமளிக்கவும் முடியாது" என்று தெரிவித்தார்.அத்தோடு காசா மருத்துவமனைகள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், அமெரிக்காவும் இதில் தொடர்ந்து மவுனம் காத்தே வருகிறது.


மறுபுறம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் சரி என்றே கூறியுள்ளார். காசா மருத்துவமனைகளுக்குக் கீழ் உள்ள சுரங்கப் பாதைகளில் ஹமாஸ் பிணையக் கைதிகளை வைத்துள்ளதாக தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் அதன் அடிப்படையிலேயே காசா மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் மீது தாக்குதல் நடத்திய அனைத்து ஹமாஸ் வீரர்களையும் அழித்தே தீருவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top