ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுக்க உதவிய இருவர் கைது

keerthi
0

 





இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு தொலைபேசி ஊடாக கொலை மிரட்டல் விடுத்து கப்பம் பெறுவதற்கு உதவிய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தமக்கு தொலைபேசி ஊடாக அழைத்து 15 இலட்சம் ரூபா கப்பம் வழங்குமாறு கோரி , மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையிலே குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இச் சந்தேகநபர்கள் இருவரும் 38 மற்றும் 40 வயதுடையவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.  


பிரதான சந்தேகநபருக்கு தம்புள்ளை, பல்வெஹெரவில் உள்ள பொலிஸாரைத் தலைமறைவாகச் செய்வதற்கு உதவி செய்தமை மற்றும் பிரதான சந்தேகநபருக்கு தங்குமிட வசதிகளை வழங்கியமைக்காக இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top