ஷம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கில்லை: ஜனாதிபதி கருத்து

keerthi
0





இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கில்லை என்றும் நீதிபதிகளை விமர்சிப்பதையிட்டு கவலையடைவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.


அத்தோடு, “நாடாளுமன்ற சிறப்புரிமையில் மறைந்து கொண்டு நீதிபதிகளை குற்றஞ்சாட்ட வேண்டாம்.


நாம் எமது வேலைகளை செய்வோம், நீதிபதிகள் அவர்களின் வேலைகளை செய்யட்டும். பிரச்சினைகள் இருந்தால் முறையாக பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.


இதேவேளை, கிரிக்கெட் விவகாரம் நீண்டகால பிரச்சினையாக இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்களாக தீவிரமடைந்துள்ளன.


சட்டத்தின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும். ஷம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கில்லை” என கூறியுள்ளார்.


அத்தோடு, அரசியலமைப்பு பேரவை நாடாளுமன்றத்தின் ஒரு பகுதியல்ல, அது நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதியின் விடயதானம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top