இன்று மழை பெய்யக்கூடிய பிரதேசங்கள் தொடர்பான அறிவிப்பு

keerthi
0

 



வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (15) மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..


அத்தோடு வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top