பாலஸ்தீனிய கைதிகளை இன்று விடுவிக்க முடியாது! இஸ்ரேல் கொடுத்த ஷாக்

keerthi
0

 




 இஸ்ரேல்-காசா இடையே தற்காலிகமாக 4 நாட்கள் போர் நிறுத்தம் என்பது இன்று முதல் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.


இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு உள்ளது. கடந்த மாதம் 7 ம்தேதி இந்த மோதல் என்பது போராக மாறியது. அதாவது அன்றைய தினம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.


மேலும் இதில் இஸ்ரேலை சேர்ந்த 1000க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். அதோடு எல்லை தாண்டி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கிவிட்டதாக கூறி காசா மீது தாக்குதலை தொடங்கினார்.


இந்த தாக்குதல் 7 வது வாரமாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல், தரைவழி தாக்குதலால் காசா நகர் உருக்குலைந்துள்ளது. காசாவை சேர்ந்த 14 ஆயிரத்துக்கும் அதிகானவர்கள் பியான நிலையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தியா உள்பட பல உலக நாடுகள் போரை நிறுத்த கூறியும் இஸ்ரேல் கேட்காமல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.


இத்தகைய சூழலில் தான் கத்தார் தலையீட்டை தொடர்ந்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாள் போர் நிறுத்தத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதாவது இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுப்பது, அதற்கு பதிலாக ஹமாஸ் அமைப்பால் பிடித்து செல்லப்பட்ட பிணைக்கைதிகளை விடுப்பது உள்பட 4 நாள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


அதன்படி இந்த போர் நிறுத்தம் என்பது இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அத்தோடு ஹமாஸ் அமைப்பினர் முதற்கட்டமாக பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள பெண்கள், குழந்தைகள் என 50 பேரை விடுவிக்க உள்ளதாகவும், அதேபோல் இஸ்ரேல் தரப்பில் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க உள்ளதாகவும், அதைத்தொடர்ந்து போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலுக்கு வரும் என்ற தவகல்கள் வெளியாகின. ஆனால் திடீரென்று தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.


அதாவது இஸ்ரேல் தரப்பில் போர் நிறுத்த நடவடிக்கை என்பது கடைசி நேரத்தில் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இன்றைய தினத்துக்கு பதில் நாளை முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுதி செய்துள்ளது. அதில் ‛‛பாலஸ்தீன கைதிகளை இன்று (வியாழக்கிழமை) விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. வெள்ளிக்கிழமைக்கு முன் எந்த கைதிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள். இதனால் பிணைக்கைதிகள் பரிமாற்றம் என்பது நாளை வரை தாமதமாகி உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இஸ்ரேல்-காசா இடையேயான 4 நாள் போர் நிறுத்தம் என்பது நாளையில் இருந்து தொடங்கலாம் என சொல்லப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top