தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகளை விதிக்க இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 100 கிராமுக்கு மேல் தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகள் உட்பட கணிசமான அளவு தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அதிகரித்து வரும் வருவாய் இழப்பை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
