மாவீரர்களை நினைவேந்த தயார் நிலையில் தாயகம் : போலி சுவரொட்டிகள் மூலம் மேற்கொள்ளப்படும் சதி

keerthi
0

 


வடக்கு - கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயக பகுதிகளில், உரிமை கோரிய யுத்தத்தில் வீர மரணத்தை தழுவிக் கொண்ட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்  மாவீரர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன.

இவ்வாறுஇருக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளை குழப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

குறித்த சுவரொட்டியில், பல தடைகள் வருகின்ற காரணத்தினால் திட்டமிட்டபடி மாவீரர் நினைவு தின நினைவஞ்சலிகள் இடம்பெறாது என்றும் அவரவர் வீட்டில் இருந்து அஞ்சலி செலுத்துமாறு குறித்த குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகளை முன்னிட்டு பலருக்கு பொலிஸாரால் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு சுவரொட்டிகள் மூலம் அஞ்சலி நிகழ்வினை குழப்பும் செயற்பாட்டில் சிலர் ஈடுபட்டு ருவதாக குற்றம்  சுமத்தப்பட்டுள்ளது.  

இதேவேளை, இந்தச் சுவரொட்டிகள் போலியானது எனவும், மாவீரர் தினத்தை குழப்பும் நோக்கில் விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கை என்றும், இந்த பொய் பிரச்சாரங்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும் மாவீரர் தின நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top