முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட ஐந்து பேர் கைது

keerthi
0


 முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட ஐந்து பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்

மேலும்   இந்த கைது நடவடிக்கை இன்று (29.11.23) இடம்பெற்றுள்ளது.

நாச்சிகுடா பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் புதையல் தோண்டுவதற்காக ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டிருந்த வேளை சந்தேகநபர்களை கைது செய்துள்ளதுடன் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் மிட்டுள்ளார்கள்.

விசுவமடு, நெத்திலியாறு, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளை சேர்ந்த ஐந்து பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 அத்தோடு இவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top