வெளிநாடொன்றில் நீதியரசராக பதவியேற்ற இலங்கையர்

keerthi
0


 சீசெல்ஸ் நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு புதிய வதிவிடமற்ற நீதியரசர்கள் பதவியேற்றுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறுஇருக்கையில் மொரீசியஸை சேர்ந்த கருணா குணேஸ் பாலகி என்பவரும் இலங்கையைச் சேர்ந்த ஜனக் டி சில்வா ஆகியவர்களே நீதியரசராக பதவியேற்றுள்ளனர்.


டி சில்வா இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக பதவி வகித்துள்ளதுடன் இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும் பதவி வகித்துள்ளார்.

சீஷெல்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றமானது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் தலைமை நீதியரசர் உட்பட ஐந்து மேல்முறையீட்டு நீதியரசர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு   தமது நாட்டிற்கு வெளியே வித்தியாசமான அனுபவங்களைப் பெறுவதற்கும் இது ஒரு வாய்ப்பாக இதனை தாம் பார்ப்பதாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் நீதிபதி ஜனக் டி சில்வா தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top