மன்னிப்பு கேட்க மாட்டேன் என அடம்பிடிக்கும் மன்சூர் அலிகான்

keerthi
0




திரிஷாவை பற்றி தவறான முறையில் பேசியதற்காக மன்சூர் அலி கான் மீது பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.


நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதன்பின் தேசிய மகளீர் ஆணையம் இதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆனால், இதுவரை மன்சூர் அலிகான் இதற்காக மன்னிப்பு கேட்கவில்லை.


அத்தோடு இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்துள்ள மன்சூர் அலிகான். இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என தெளிவாக தெரிவித்துள்ளார். திரிஷா குறித்து நான் தவறாக எதுவும் பேசவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் தவறு செய்துவிட்டதாகவும். தான் பேசியது தொடர்பாக தன்னிடம் நடிகர் சங்கம் விளக்கம் கேட்க வில்லை என்றும் மக்களுக்கு தன்னை பற்றி நன்றாக தெரியும், தமிழ்நாடே தன் பக்கம் தான் என பேசியுள்ளார்.


இதுமட்டுமின்றி நடிகை த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இப்படி இவர் பேசியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திரையுலக சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் திரிஷாவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் நடிகர் சிரஞ்சீவி, நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது மிகவும் அருவருப்பான விஷயம். நான் திரிஷாவுடன் நிற்கிறேன் என கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் இந்த விஷயம் எங்கு போய் முடியப்போகிறது என்று.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top