2023ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்டவை: கூகுள் வெளியிட்ட பட்டியல்

keerthi
0

 


இந்த ஆண்டில் கூகுள் மூலம் அதிகம் தேடப்பட்ட விடயங்களை அந்நிறுவனம் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.

அவ்வகையில் 2023ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகளில் செய்திகளின் பட்டியலில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான தேடல் இந்த ஆண்டு முதலிடத்தில் உள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் என்பது இரு நாடுகளுக்கான போர் மாத்திரம் இது சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

மேலும், டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்ய சென்ற நீர்மூழ்கிக் கலன், பெப்ரவரியில் துருக்கி மற்றும் சிரியாவில் பேரழிவுகளை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஆகிய தேடல்கள் அடுத்தடுத்த இடங்களில் இடம்பெற்றுள்ளன.

 அத்தோடு      பொழுதுபோக்கு தேடலில், இந்த ஆண்டு பார்பி திரைப்படம் அதிகம் தேடப்பட்டு முதலிடத்தை பிடித்துள்ளது. 

விளையாட்டு தேடல்களில் நியூசிலாந்தின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா, மற்றும் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சுப்மன் கில் ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top