22 பாடசாலைகளுக்கு மின்சாரம் இல்லை : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

keerthi
0


 மாத்தறை மாவட்டத்தின் வலயக் கல்விப் பிரிவில் ஐந்து தேசிய பாடசாலைகள் உட்பட 22 பாடசாலைகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாடசாலைகளின் மின்சாரக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட வலயக் கல்விப் பிரிவே செலுத்த வேண்டிய போதிலும், நிதிப் பற்றாக்குறையினால் மாத்தறை வலயக் கல்விப் பிரிவு குறித்த கட்டணத்தை செலுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் குறித்த மின்சாரக்கட்டணத்தை பெற்றோர் மூலம் செலுத்த வைக்கும் அரசாங்கத்தின் ஒருவித சதியாகவே இது பார்க்கப்படுகிறது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, உடனடியாக இந்த பாடசாலைகளுக்கு மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாத்தறையில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top