யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் ஆறு மாத பெண் குழந்தை ஒன்று மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (23.12.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பிருந்தாபன் அட்சரா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கடந்த 22ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பெற்றோர் இரவு 12 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
மரண விசாரணை
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் குழந்தையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.