மாணவிகள் துஷ்பிரயோகம் ஆசிரியருக்கு விளக்கமறியல்..!!

tubetamil
0

 மூன்று பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விஞ்ஞான ஆசிரியர்  எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 3 மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக அதே பாடசாலையின் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.

கித்துல்லே, பல்லேதோவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய திருமணமான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் 9 ஆம் வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியர் எனவும், அவர் விஞ்ஞான பாடத்தை கற்பிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் மனைவியும் ஆசிரியை என்பது தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியர் மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த மாணவியின் ஊடாக ஏனைய இரு மாணவிகளும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாணவி ஒருவரிடம் வட்ஸ்அப் மூலம் நிர்வாண புகைப்படங்களை கேட்டு வற்புறுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆசிரியரின் கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் நேற்று (21) ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவிகள் மூவரும்  வைத்திய பரிசோதனைக்காக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top