இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு..!!

tubetamil
0

 பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று  அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் உத்தேச கூட்டுத் திட்டங்களை விரைவுப்படுத்துவதற்கான வழி வகைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி துறையில் இந்திய முதலீடுகளை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள், துறைமுகம், ரயில் பாதைகள் தொடர்பான கூட்டுத் திட்டங்கள் மற்றும் விவசாயம் மற்றும் கடற்றொழில் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும்  அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top